/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மலைவாழ் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல் மலைவாழ் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்
மலைவாழ் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்
மலைவாழ் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்
மலைவாழ் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்
ADDED : ஜூலை 18, 2024 12:06 AM

திருப்பூர் : உடுமலையை சேர்ந்த, 48 மலைவாழ் குழந்தைகளுக்கு, நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.
மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பல்வேறு தரப்பினரின் உதவி மூலம், 70 ஆயிரம் ரூபாய் சேகரிக்கப்பட்டு, உடுமலை, அமராவதி மலைவாழ் பள்ளி மாணவ, மாணவியர், 48 பேருக்கு தேவையான பள்ளி சீருடைகள், பேக், நோட்டு, புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வாங்கப்பட்டது. அதனை மாணவ, மாணவியருக்கு வழங்கினர்.
அறக்கட்டளையின் மூத்த தலைவர் தங்கவேல் பழனிசாமி, யோகேஷ்சண்முகம் தலைமையில் நிர்வாக தலைவர் லீலா ஜெகன், செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் சரவணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.