/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிலைகுலையும் குறு - சிறு நிறுவனங்கள்; திருப்பூர் தொழில்துறையினர் கவலை நிலைகுலையும் குறு - சிறு நிறுவனங்கள்; திருப்பூர் தொழில்துறையினர் கவலை
நிலைகுலையும் குறு - சிறு நிறுவனங்கள்; திருப்பூர் தொழில்துறையினர் கவலை
நிலைகுலையும் குறு - சிறு நிறுவனங்கள்; திருப்பூர் தொழில்துறையினர் கவலை
நிலைகுலையும் குறு - சிறு நிறுவனங்கள்; திருப்பூர் தொழில்துறையினர் கவலை

பெரிய சவால்
திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரவிச்சந்திரன்: பனியன் தொழிலுக்கு, மின் கட்டண உயர்வு என்பது மிகவும் சவாலாக மாறியுள்ளது. இதேநிலை நீடித்தால், பனியன் தொழில் வேறு மாநிலங்களுக்கு நகர்ந்து விடும். வடமாநிலங்களில், அதிகபட்ச மின் கட்டண சலுகையுடன் தொழில் துவங்க அழைப்பு விடுக்கின்றனர். திருப்பூர் பனியன் தொழில், இடம்பெயர்ந்து விடும் அபாயம் உள்ளது. தொழில்துறையினரின் கோரிக்கையை கேட்டு, மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.
தடுமாறுகிறது
திருப்பூர் 'பவர் டேபிள்' உரிமையாளர் சங்க செயலாளர் முருகேசன்: குறு, சிறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன; ஏற்கனவே, சுமக்க முடியாத அளவுக்கு கட்டணம் அபரிமிதமாக உயர்ந்துவிட்டது. பனியன் தொழில் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது கவலை அளிக்கிறது. திருப்பூரின் பாதிப்புகளை உணர்ந்து, பனியன் தொழிலை பாதுகாக்க, தமிழக முதல்கர் கருணை காட்ட வேண்டும்.
வாபஸ் பெறணும்!
'டீசா' சங்க தலைவர் சுரேஷ்பாபு: தொழில் முனைவோர், இரண்டு ஆண்டுகளாக, மின் கட்டணத்தை குறைக்க போராடியும் தீர்வு கிடைக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுளி அளித்தார் முதல்வர். மாறாக, மின் கட்டணம், மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
சலுகை வேண்டும்
திருப்பூர் கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங் அசோசியேஷன் தலைவர் கோபால கிருஷ்ணன்: கொரோனாவுக்கு பின், பல்வேறு சவால்களை சந்தித்து வந்த பனியன் தொழில், தற்போதுதான், இயல்பு நிலைக்கு வந்துள்ளது.