/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மண் எடுக்கும் அனுமதியில் பாரபட்சம்; விவசாயிகள் முற்றுகை மண் எடுக்கும் அனுமதியில் பாரபட்சம்; விவசாயிகள் முற்றுகை
மண் எடுக்கும் அனுமதியில் பாரபட்சம்; விவசாயிகள் முற்றுகை
மண் எடுக்கும் அனுமதியில் பாரபட்சம்; விவசாயிகள் முற்றுகை
மண் எடுக்கும் அனுமதியில் பாரபட்சம்; விவசாயிகள் முற்றுகை
ADDED : ஜூலை 19, 2024 03:06 AM

உடுமலை;உடுமலை தாலுகா அலுவலகத்தில், நீர் நிலைகளில் மண் எடுக்க அனுமதி வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீர் நிலைகளை துார்வாரும் வகையிலும், விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.
இ - சேவை மையங்களுக்குச்சென்று, ஆன்லைன் வாயிலாக, விவசாயிகள், ஆதார், நில உடமை சான்று, சிட்டா மற்றும் போட்டோ ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணை மற்றும் குளங்களில் மண் எடுக்க, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மண் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதில், வருவாய்த்துறை அதிகாரிகள் பாரபட்சம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகளின் விண்ணப்பங்களை காரணம் இல்லாமல் தள்ளுபடி செய்வதாகவும் கூறி, உடுமலை தாலுகா அலுவலகத்தில், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், முற்றுகை போராட்டம் நடந்தது.
தாசில்தார் சுந்தரம், டி.எஸ்.பி., சுகுமாறன் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.