Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தரமற்ற உணவு குறித்து புகார் நடவடிக்கையில் தாமதம்?

தரமற்ற உணவு குறித்து புகார் நடவடிக்கையில் தாமதம்?

தரமற்ற உணவு குறித்து புகார் நடவடிக்கையில் தாமதம்?

தரமற்ற உணவு குறித்து புகார் நடவடிக்கையில் தாமதம்?

ADDED : ஜூலை 19, 2024 12:53 AM


Google News
திருப்பூர், ;'ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுவதாக தகவல் தெரிந்தால், உணவு பாதுகாப்பு துறையின் 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு புகார் அனுப்பலாம்,' என, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர், புதுக்காடு பகுதியில் உள்ள ஓட்டலில், நேற்று முன்தினம், 'சிக்கன்' வாங்கிய ஒருவர், அது, கெட்டுப்போன நிலையில் இருப்பதாக, கடைக்காரரிடம் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக, புகார் தெரிவிக்க உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்ட போது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என, அந்த வாடிக்கை யாளர் கூறினார்.

இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

பேக்கரி, ஓட்டல்களில் தரமற்ற மற்றும் கெட்டுப்போன உணவு தயாரித்து வழங்கப்படுவதாக தினமும் புகார்கள் வருகின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில நேரங்களில், அலுவல் ரீதியான கூட்டத்தில் பங்கேற்கும் போது, மொபைல் போன் அழைப்பை ஏற்பது கடினமாக இருக்கும்.

உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். அப்புகாரின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 72 மணி நேரத்துக்குள் அந்த புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us