/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இட மாறுதல் விவகாரம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு இட மாறுதல் விவகாரம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
இட மாறுதல் விவகாரம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
இட மாறுதல் விவகாரம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
இட மாறுதல் விவகாரம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 05, 2024 02:57 AM
திருப்பூர்:இடம் மாறுதல் விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த, பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் முடிவெடுத்துள்ளது.பாரதிய மின் தொழிலாளர் சம்மேளன கோட்ட செயலாளர் மாரியப்பன், அறிக்கை:திருப்பூர் கோட்டத்தில் இடம் மாறுதல் ஆணை பெற்றுள்ள கணக்கீட்டு பணியாளர்களை, கணக்கீட்டு பிரிவில் பற்றாக்குறை இருந்தும், இடம் மாறுதல் பெற்ற ஆணையின் முதன்மை பட்டியலை பின்பற்றாமல், விடுவிப்பதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.வாரியத்தில் எவ்வித தற்காலிக இடம் மாறுதலும் செய்யக் கூடாது என்ற உத்தரவு இருப்பினும், திருப்பூர் கோட்டத்தில் தற்காலிக இடம் மாறுதல் வழங்கப்படுகிறது.
எவ்வித 'சீனியாரிட்டி'யும் பின்பற்றாமல், சில தனிப்பட்ட நபர்களுக்கு சாதகமாக தற்காலிக இடம் மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது. இக்கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, வரும், 9ம் தேதி மாலை, 5:20 மணிக்கு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.