Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஏமாறும் சிறுமியர்; அனுதினமும் புகார்கள் விழிப்புணர்வு தேவை

ஏமாறும் சிறுமியர்; அனுதினமும் புகார்கள் விழிப்புணர்வு தேவை

ஏமாறும் சிறுமியர்; அனுதினமும் புகார்கள் விழிப்புணர்வு தேவை

ஏமாறும் சிறுமியர்; அனுதினமும் புகார்கள் விழிப்புணர்வு தேவை

ADDED : ஜூன் 12, 2024 10:42 PM


Google News
திருப்பூர் : 'குழந்தைகள் உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் பாதிக்கப்படக் கூடாது' என்பதை நோக்கமாக கொண்டு தான், நேற்று, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதில், '14 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி தவறு' என்ற அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, சில குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.

அவர்களை பள்ளிகளுக்கு அனுப்பி, கல்வி பயில வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளனர்.அதே நேரம், 15 முதல், 18 வயது வரையுள்ள வள ரிளம் பெண்களை கூட, குழந்தைகள் என்ற வகையில் தான் அணுக வேண் டும் என்பது சட்டம்.

தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியில், சிறுவர், சிறுமியரை சீரழிக்கும் பல விஷயங்கள், இணைய தளத்தில் புதைந்து கிடக்கின்றன. முகநுால், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக பல குற்றங்கள் நிகழ்கின்றன.

அவற்றை புறந்தள்ளி நல்ல விஷயங்களை மட்டும் தேடுவோர் சிலர்; ஆனால், புதைந்து கிடக்கும் ஆபாசங்களை தேடி பிடித்து, தங்கள் மனதை பாழ்படுத்திக் கொள்வோர் பலர்.

சமூக வலைதளங்களில் இளைஞர்களிடம் ஏமாந்து போகும் சிறுமியர் குறித்த புகார், தினம், தினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துகொண்டு தான் இருக்கிறது. விவகாரம் வெளியே தெரியாமல், பெற்றோர் முன்னிலையில் பேசி முடிக்கும் நிலைக்கு போலீசாரும் தள்ளப்படுகின்றனர்.

பெற்றோர் சிலர் கூறியதாவது:

சமூக ஊடகங்களை எப்படி நல்ல வகையில் பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வு மாணவ, மாணவியர் மத்தியில் இல்லை. இதனால், சைபர் கிரைம் குற்றங்களுக்கு சிறுமியர் ஆளாக்கப்படுகின்றனர்.

சமூக ஊடகங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றுவது, அறிமுகமில்லாத நபரிடம் தொடர்பு வைத்துக்கொள்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற அறிவுரை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் மாதம் இருமுறையாவது, இதுதொடர்பான விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us