ADDED : ஜூன் 25, 2024 12:49 AM
திருப்பூர்;அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி, மாவட்ட அளவிலான போட்டிகள், ஜூலை 9ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. பேச்சுப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, முதல் பரிசாக, 5000 ரூபாய்; இரண்டாவது பரிசாக, 3,000 ரூபாய்; மூன்றாவது பரிசாக , 2,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர் இருவரை தேர்வு செய்து, சிறப்பு பரிசாக, 2,000 ரூபாய் வழங்கப்படும். பள்ளி தலைமையாசிரியர்கள், தமிழ்மன்றம் வாயிலாக முதல் சுற்று போட்டி நடத்தி, மாவட்ட அளவிலான போட்டிக்கு, முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.
கல்லுாரி போட்டியில் பங்கேற்போர் விவரத்தை, நேரிலோ அல்லது ddtamil607@gmail.com என்ற மின்னஞ்சலில், ஜூலை 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.