/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேக்கம்: சிதிலமடைந்த ஓடு தளத்தால் பாதிப்பு ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேக்கம்: சிதிலமடைந்த ஓடு தளத்தால் பாதிப்பு
ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேக்கம்: சிதிலமடைந்த ஓடு தளத்தால் பாதிப்பு
ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேக்கம்: சிதிலமடைந்த ஓடு தளத்தால் பாதிப்பு
ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேக்கம்: சிதிலமடைந்த ஓடு தளத்தால் பாதிப்பு
ADDED : ஜூன் 12, 2024 12:17 AM

உடுமலை;உடுமலையில், ரயில்வே சுரங்கப்பாலங்கள் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
உடுமலை தளி ரோட்டில், ரயில்வே சுரங்கப்பாலம் உள்ளது. தளி ரோட்டிலுள்ள கிராம மக்கள் மற்றும் நகரின் தெற்கு பகுதியில் வசிக்கும் மக்கள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
சுரங்க பாலத்தை பராமரிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, மழை காலத்தில், பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
அதே போல்,ஓடு தளமும், சிதிலமடைந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
எனவே, தளி ரோடு ரயில்வே சுரங்கப்பாலத்தில், மழை நீர் வெளியேற்றும், சேகரிப்பு தொட்டி, மின்மோட்டார் உள்ளிட்ட கட்டமைப்புகளை புதுப்பித்து, மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல், ஓடு தளத்தை புதுப்பிக்கவும், மின் விளக்குகளை மாற்றவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல், பெரியார் நகர் ரயில்வே சுரங்கப்பாலத்தில், கழிவு நீர் தேங்கியும், கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழி, முறையாக மூடப்படாததால் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, இதனையும் புதுப்பிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.