/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உடுமலை பகுதிகளில் துளிர்க்கும் கரும்பு சாகுபடி உடுமலை பகுதிகளில் துளிர்க்கும் கரும்பு சாகுபடி
உடுமலை பகுதிகளில் துளிர்க்கும் கரும்பு சாகுபடி
உடுமலை பகுதிகளில் துளிர்க்கும் கரும்பு சாகுபடி
உடுமலை பகுதிகளில் துளிர்க்கும் கரும்பு சாகுபடி
ADDED : ஜூன் 11, 2024 12:18 AM

உடுமலை;உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆதாரமாகக்கொண்டு, கரும்பு சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதில், உடுமலை ஏழு குள பாசன திட்டத்தின் கீழ், 2,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இப்பகுதிகளில், பெரும்பாலும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
இங்கு, விளையும் கரும்பு, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வெல்லம் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டது. தற்போது, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, பழமையான இயந்திரங்கள் காரணமாக, அரவை மேற்கொள்ள முடியாமல், முடங்கியுள்ளது.
இதனால், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கரும்பு சாகுபடி பெருமளவு குறைந்துள்ளது.இந்நிலையில், உடுமலை, ஏழு குளம் பாசன பகுதிகளில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு விளையும் கரும்பிலிருந்து, விளை நிலங்களிலேயே சிறிய அளவிலான ஆலை அமைத்து, நேரடியாக விவசாயிகள் வெல்லம், சர்க்கரை, அச்சு வெல்லம் உற்பத்தி செய்து, அவற்றை விற்று வருகின்றனர்.
இதில், கூடுதல் வருவாய் கிடைத்து வருவதால், இன்றளவும் உடுமலை, போடிபட்டி, சுண்டக்காம்பாளையம், வட பூதனம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக விதைப்பு முறையிலும், கட்டை கரும்பு முறையிலும், தொடர்ந்து கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.