/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நடைமேம்பாலம் மீது தடையின்றி குற்றச்செயல் நடைமேம்பாலம் மீது தடையின்றி குற்றச்செயல்
நடைமேம்பாலம் மீது தடையின்றி குற்றச்செயல்
நடைமேம்பாலம் மீது தடையின்றி குற்றச்செயல்
நடைமேம்பாலம் மீது தடையின்றி குற்றச்செயல்
ADDED : ஜூலை 05, 2024 03:04 AM

திருப்பூர்;திருப்பூர் புஷ்பா தியேட்டர் சந்திப்பு சாலையில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் விபத்தை தவிர்க்க நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 'சாலையை கடக்கும் மக்கள், நடைமேம்பாலத்தின் மீது ஏறி செல்ல வேண்டும்' என, போலீசாரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் அறிவுறுத்தினர்.
மிக சிலரை தவிர, பெரும்பாலான மக்கள் இந்த நடைமேம்பாலத்தை பயன்படுத்துவது இல்லை. நடைமேம்பாலத்தின் மீது யார் நடந்து செல்கின்றனர் என்பது சாலையில் இருந்தே பார்க்கும் வகையில் தான் இருந்தது. நடைமேம்பாலத்தின் இருபுற பக்கவாட்டு பகுதியிலும், பேனர் வைத்து மறைக்கப்பட்டுள்ளனஇதனால், இரவு நேரங்களில், மேம்பாலத்தின் மீது மது அருந்துவது, மேம்பாலத்தை கடக்கும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது போன்ற செயல்களில் பலரும் ஈடுபடுகின்றனர். இங்கு நடக்கும் குற்றச் செயல்கள், மேம்பாலத்துக்கு வெளியே தெரிவதும் இல்லை.'இதுபோன்ற பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்' என, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா உதவியால் பல்வேறு குற்றச் செயல்களை கண்டறியவும் செய்கின்றனர்.'இதுபோன்ற நிலையில் நகரின் மத்தியில், பல்வேறு குற்றச் செயல்களுக்கு காரணமாக இருக்கும் நடைமேம்பாலத்தை மறைத்துள்ள பேனரை அகற்ற வேண்டும்' என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.---