/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கட்டுமானப்பொருள் கண்காட்சி இன்று நிறைவு கட்டுமானப்பொருள் கண்காட்சி இன்று நிறைவு
கட்டுமானப்பொருள் கண்காட்சி இன்று நிறைவு
கட்டுமானப்பொருள் கண்காட்சி இன்று நிறைவு
கட்டுமானப்பொருள் கண்காட்சி இன்று நிறைவு
ADDED : ஜூலை 21, 2024 11:31 PM

திருப்பூர்:திருப்பூரில் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் நடைபெறும் நான்கு நாள், கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி கடந்த 19ம் தேதி துவங்கியது.கட்டுமானத் துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களின் சார்பில் 200 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி இன்றுடன்(22ம் தேதி) நிறைவடைகிறது. கடந்த மூன்று நாளாக கண்காட்சியில் கட்டுமான துறை சார்ந்தோர் மற்றும் பார்வையாளர்கள் திரளாக கலந்து கொண்டு, அரங்குகளைப் பார்வையிட்டனர். விறுவிறுப்பான வர்த்தக விசாரணை நடந்தது. கண்காட்சியில், பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கல், கம்பி, சிமென்ட், ரெடிமேட் கான்கிரீட் நிறுவனங்கள், மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள், டைல்ஸ், கிரானைட், மார்பிள்ஸ், மரத் தளம், நவீன மின்சாரம் மற்றும் பிளம்பிங் பொருட்கள்; புதிய வடிவிலானா அலங்கார மின் விளக்குகள், 'சிசிடிவி' கேமரா, மாடர்ன் ஹோம் ஆட்டோமேஷன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகைகள், பேவர் பிளாக், சோலார் லாக்கர், கண்ணாடி வகைகள் மற்றும் புதிய பெயிண்ட் வகைகள், குளியலறை பிட்டிங்ஸ் உள்ளிட்டவை உள்ளன.கட்டுமானம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் வல்லுனர்கள் பார்வையாளர் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். தினமும் மாலை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.காலை 10:00 முதல் மாலை 8:00 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம்; அனுமதி இலவசம்.
---
-------
திருப்பூர், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில், கட்டட கட்டுமானக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நேற்று, கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.