/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ யோகா போட்டியில் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு யோகா போட்டியில் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு
யோகா போட்டியில் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு
யோகா போட்டியில் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு
யோகா போட்டியில் வெற்றி; மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 01, 2024 11:14 PM
திருப்பூர்;ஆசியா பசிபிக் யோகாசன போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மூன்றா-வது ஆசியா- - பசிபிக் யோகாசன போட்டி கள் அண்மையில், தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவு களில் பங்கேற்ற அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். இதில், அருள் கிருத்திக், மிதுன், திஷாந்த், நிவ்யா, தக் ஷனா ஆகியோர் தங்கப் பதக்கம் பெற்றனர். மேலும் வர்ஷன், நிதர்ஷனா, வியாஷினி, சாஷ்வந்த் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களும், தாருணிக்கா, சஷ்ருதா, சூர்யா, கனிஷ்கா, அத்விகா ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வென்றனர்.
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர்கள் ஜாவித், காளீஸ்வரி, ரம்யா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.