ADDED : ஜூன் 24, 2024 02:23 AM
அவிநாசி;அவிநாசி பகுதியில் பட்டறை பஸ் ஸ்டாப்பில் டாஸ்மாக் மது பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சந்தேகப்படும்படியாக டூவீலரில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
எஸ்.மேட்டுப்பாளையம் பட்டறை பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி, 37 என்பவரிடம் இருந்து 50 டாஸ்மாக் குவார்ட்டர் மது பாட்டில்களையும் டூவீலரையும் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
நடுவச்சேரி ஊராட்சியில் உள்ள வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனையில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் சிக்கினார். அவரிடமிருந்து பத்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.