Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஓ.கே.,

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஓ.கே.,

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஓ.கே.,

கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஓ.கே.,

ADDED : மார் 14, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
திருப்பூர் : பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில், மூன்று மதிப்பெண் கட்டாய வினா 'புரோகிராம்' சார்ந்த கேள்வியாக இடம் பெற்றிருந்தது. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வில் இதுவரை கேட்கப்படாத புதிய கேள்விகள் வந்திருந்தன.

நேற்று, பிளஸ் 1 வகுப்புக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு நடந்தது. 8,892 பேர் விண்ணப்பித்த நிலையில், 8,823 பேர் தேர்வெழுதினர். 69 பேர் தேர்வெழுதவில்லை. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் தேர்வை, 7,288 பேருக்கு, 7,187 பேர் எழுதினர். 101 பேர் பங்கேற்கவில்லை. புள்ளியியல் தேர்வை, 983 பேரும், நுண்ணுயிரியல் தேர்வை, 12, ேஹாம் சயின்ஸ் தேர்வை, 96 , அரசியல் அறிவியல் தேர்வை, 20, சிறப்பு தமிழ் தேர்வை, 30, அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் தேர்வை, 28 பேரும் எழுதினர்.

தேர்வு குறித்து மாணவர்கள் கூறியதாவது:

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்


பிரதீப்: ஒரு மதிப்பெண் எளிதாக இருந்தது. இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் கட்டாய வினாவில் எதிர்பார்த்த கேள்வி வந்திருந்தது. எளிமையாக விடையளிக்க முடிந்தது. ஐந்து மதிப்பெண்ணில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் இல்லாமல் புதியதாக கேள்விகள் இருந்தது.

முகமது ரியாஸ்தின்: ஒரு மதிப்பெண் எளிமையாக இருந்தது; ஒரிரு கேள்விகள் சற்று யோசித்து விடையெழுதும் வகையில் இருந்தது. ஐந்து மதிப்பெண்ணில் எதிர்பார்த்த கேள்வி இடம் பெறவில்லை. புத்தகத்துக்குள் இருந்து டாபிக் எடுத்து 'கிரியேட்டிவ்' கேள்விகளாக கேட்டிருந்தனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ்


கேசவன்: முழு மதிப்பெண் பெறும் வகையில், ஒரு மதிப்பெண்ணில் அனைத்தும் தெரிந்த கேள்விகளே இடம் பெற்றிருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்கள் பாடங்களுக்கு பின் புத்தகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தது. விடை தெரிந்த கேள்விகள் என்பதால், நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

அர்ஜூன்: இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண்ணில் கட்டாய வினா 'புரோகிராம்' சார்ந்த கேள்வியாக இடம் பெற்று விட்டது. யோசித்து விடையளிக்க வேண்டியிருந்தது. ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண்ணில் முழுமையாக மதிப்பெண் பெற முடியும்.

தேர்ச்சி சதவீதம் உயரும்


நஞ்சப்பா பள்ளி ஆசிரியர் சதீஷ்குமார் கூறியதாவது:

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஒரு மதிப்பெண்ணில் ஒரு கேள்வி மட்டும் பாடத்துக்குள் இருந்தும், இரண்டு கேள்விகள் சற்று யோசிக்கும் வகையில் இருந்தது. இரண்டு, மூன்று மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் எதிர்பார்த்தவை என்பதால், நிச்சயம் முழுமையாக விடை எழுதியிருக்க முடியும். முந்தைய ஆண்டு வினாத்தாளில் இடம் பெற்ற வினாக்களாக இல்லாவிட்டாலும், நன்கு படித்த மாணவர்கள், ஐந்து மதிப்பெண் 'கிரியேட்டிவ்' வினாவை புரிந்து கொண்டு, விடை எழுதியிருப்பர். கேள்வியை புரிந்து கொண்டவர்களுக்கு வினாத்தாள் எளிமைதான்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் கட்டாய வினாவில் 'புரோகிராம்' வினா கேட்கப்படுவது வழக்கமானது தான். ஒரு மதிப்பெண், இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஏற்கனவே பலமுறை கேட்கப்பட்டது தான். ஆகையால் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற்று விடுவர். வினாத்தாள் கடினமில்லை. 'சென்டம்' பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us