ADDED : ஜூலை 10, 2024 12:19 AM
பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, கலெக்டரிடம் அளித்த மனு:
பல்லடம் பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டண கழிப்பிடம், டூவீலர் ஸ்டாண்டை முறையாக ஏலம் விடாததால், நகராட்சிக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சின்னமனுார் குட்டை பராமரிப்பில், 2 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளது. மக்களுக்கு பயனில்லாத குட்டை பராமரிப்புதிட்டத்தால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. பூங்கா அமைத்தல், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், புதிய கட்டடங்கள்அமைத்தல், குடிநீர் குழாய் பணிகளில், நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இந்தமுறைகேடுகள் தொடர்பாக விசாரணைநடத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.