கட்டட பொறியாளர் சங்க மண்டல மாநாடு
கட்டட பொறியாளர் சங்க மண்டல மாநாடு
கட்டட பொறியாளர் சங்க மண்டல மாநாடு
ADDED : ஜூலை 19, 2024 12:34 AM
திருப்பூர்;திருப்பூரில் கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மண்டல மாநாடு வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், 19 வது கட்டட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி, தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இன்று காலை துவங்குகிறது. வரும் 22ம் தேதி வரை நான்கு நாள் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
மேலும், வரும் 22ம் தேதி, காலை, 9:30 மணிக்கு வித்யா கார்த்திக் திருமண மண்டப வளாகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மண்டல மாநாடு (மண்டலம் ஏழு) நடைபெற உள்ளது.
மாநாட்டுக்கு மண்டல தலைவர் ஸ்டாலின் பாரதி தலைமை வகிக்கிறார். மண்டலம் ஏழுக்கு உட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்டட பொறியாளர் சங்கத்தினர் இதில் பங்கேற்கின்றனர். சங்க செயல்பாடுகள், கட்டட அனுமதிக்கான திருத்தப்பட்ட நெறிமுறைகள் உட்பட பல்வேறு பொருட்கள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.