/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தென்னந்தோப்பில் குறுமிளகு சாகுபடி ; வழிகாட்டுதல் தேவை தென்னந்தோப்பில் குறுமிளகு சாகுபடி ; வழிகாட்டுதல் தேவை
தென்னந்தோப்பில் குறுமிளகு சாகுபடி ; வழிகாட்டுதல் தேவை
தென்னந்தோப்பில் குறுமிளகு சாகுபடி ; வழிகாட்டுதல் தேவை
தென்னந்தோப்பில் குறுமிளகு சாகுபடி ; வழிகாட்டுதல் தேவை
ADDED : ஜூன் 21, 2024 11:53 PM
உடுமலை;உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னை மரங்களை அகற்றி விட்டு மாற்றுச்சாகுபடிக்கு செல்வது சாத்தியமில்லை; எனவே, இழப்பை ஈடுகட்ட தென்னந்தோப்புகளில் ஊடுபயிர் சாகுபடி செய்ய முயற்சிக்கின்றனர்.
ஆனால், அதற்கான வழிகாட்டுதல்கள், நாற்று, இடுபொருட்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. தென்னையில், ஊடுபயிராக குறுமிளகு, சாகுபடி செய்வதால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒரு மரத்தின் மீது 4 மிளகு கொடிகள் வளர்த்து, உயரே வளரச்செய்யலாம். ஒரு கொடியில், 200 கிராம் வரை மிளகு பெறலாம். ஒரு ஏக்கரில், 320 கொடிகள் வளர்த்து, மேலே ஏற்றும் போது, தலா, 200 கிராம் விளைச்சல் கிடைத்தால் கூட 64 கிலோ மிளகு பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின், 'ஸ்பைசஸ் போர்டு' வாயிலாக, குறுமிளகு சாகுபடிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.