ADDED : ஜூலை 06, 2024 10:50 PM
திருப்பூர்:காங்கயத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் தலைமை திரளானோர் பங்கேற்றனர்.
பி.டி.ஓ.,க்கள் அனுராதா, விந்தியா முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் பரிமளா, டாக்டர் பாலசந்திரன் ஆகியோர் பேசினர். குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் விவரம், குழந்தை திருமணம், பாலியல் குற்றம் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.