/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அறநிலையத்துறை வழக்குகள் ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு அறநிலையத்துறை வழக்குகள் ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு
அறநிலையத்துறை வழக்குகள் ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு
அறநிலையத்துறை வழக்குகள் ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு
அறநிலையத்துறை வழக்குகள் ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு ஹிந்து முன்னணி எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 13, 2024 02:12 AM
திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை:
ராமேஸ்வரம் கோவிலில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய ஓய்வு ஊதிய திட்டப்படி கட்ட வேண்டிய தொகையை, தற்காலிக ஊழியர் சிவன் அருள் குமரன் கணக்காளர், இணை கமிஷனர் துணையோடு முறைகேடு செய்ததாக சி.பி.சி.ஐ.டி., போலீசாரால், ராமேஸ்வரம் செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு 2016ல் துவங்கி, 2020ல் விசாரணைக்கு வந்தது. 2,000 பக்கங்கள் கொண்ட, இந்த குற்ற பத்திரிகையை நீதிபதி படித்து, விசாரணை நடத்தி குற்றவாளிகளிடம் இருந்து, ஒரு கோடி மோசடி பணத்தை எப்போது மீட்பார்கள்.
கோவிலை நிர்வகிக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை போல ஒரு மோசடி நிர்வாகத்தை வேறு எந்த துறையிலும் பார்க்க முடியாது. மற்ற துறைகளினால், பலனடைபவரிடம் இருந்து லஞ்சம் பெறுவர்.
பக்தர்கள் தங்கள் சொந்த பணத்தை கோவிலுக்கு கைங்கர்யம் செய்வதற்கு கூட, லஞ்சம் பெறப்படுகிறது.
அறநிலையத்துறையினால் நடக்கும் அனைத்து கிரிமினல் சிவில் வழக்குகளை விரைவாக விசாரித்து, உடனடியாக தீர்ப்பு வருவதற்கு மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.