/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்றும் நாளையும் ரயில் இயக்கம் மாற்றம் இன்றும் நாளையும் ரயில் இயக்கம் மாற்றம்
இன்றும் நாளையும் ரயில் இயக்கம் மாற்றம்
இன்றும் நாளையும் ரயில் இயக்கம் மாற்றம்
இன்றும் நாளையும் ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : ஜூலை 20, 2024 11:02 PM
திருப்பூர்:'பாட்னா, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில்கள் இன்றும், நாளையும் கோவை ஜங்ஷன் செல்லாது,' என, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
கோவை ஜங்ஷன், பீளமேடு, கோவை வடக்கு ரயில்வே ஸ்டேஷனில் பொறியியல் மேம்பாடு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், இன்றும், நாளையும் (22ம் தேதி) ரயில் இயக்கம் மாற்றப்படுகிறது.
அதன்படி, சென்னை எழும்பூர் - மங்களூரு (எண்:16159), ரயில் பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் செல்லாது; இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் இயங்கும். இதே வழித்தடத்தில் ஆலப்புழா - தன்பாத் (எண்:13352), எர்ணாகுளம் - பெங்களூரு (எண்:12678) ரயில்கள் இயங்கும்.
பாட்னா - எர்ணாகுளம் (எண்:22644), திப்ரூகர் - கன்னியாகுமரி (எண்:22504), சில்சார் - திருவனந்தபுரம் (எண்:12508), புதுடில்லி - திருவனந்தபுரம் (எண்: 12626), பெங்களூரு - எர்ணாகுளம் (எண்:12677) ரயில்கள் கோவை ஜங்ஷன் செல்லாது; போத்தனுாரில் கூடுதலாக நின்று செல்லும். ஈரோடு - கோவை பாசஞர் ரயில் (எண்:06801) இருகூர் வரை மட்டும் இயக்கப்படும். சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு மற்றும் கோவை ஜங்ஷன் செல்லாது.