/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பு பள்ளிகளுக்கு சான்று வழங்கல் திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பு பள்ளிகளுக்கு சான்று வழங்கல்
திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பு பள்ளிகளுக்கு சான்று வழங்கல்
திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பு பள்ளிகளுக்கு சான்று வழங்கல்
திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பு பள்ளிகளுக்கு சான்று வழங்கல்
ADDED : ஜூலை 30, 2024 11:51 PM

திருப்பூர்:'என் குப்பை என் பொறுப்பு' என்ற நோக்கில் பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மையில் பங்காற்றிய பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பூரில் இயங்கி வரும் 'துப்புரவாளன்' அமைப்பு திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் சேகரமாகும் திடக்கழிவுகளை மாணவர்கள் மூலம் பெற்று மறுசுழற்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த கல்வியாண்டில் இத்திட்டத்தில் சிறப்பாகப் பங்களிப்பு செய்த பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு பாராட்டு விழா, தெற்கு ரோட்டரி அரங்கில் நேற்று நடந்தது. துப்புரவாளன் அமைப்பின் பத்மநாபன் வரவேற்றார். தெற்கு ரோட்டரி தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். 'சேவ்' அமைப்பின் வீரபத்மன், ரோட்டரி நிர்வாகி சக்திவேல், பாலபவன் பள்ளி முதல்வர் மாலதி உட்பட பலர் பங்கேற்றனர். மோகன்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக, மாணவர்களுக்கு மேயர் தினேஷ்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றுவது பெரும் சவாலாக இருந்து வந்தது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் துாய்மைப் பணியாளர்களின் அயராத உழைப்பால் இன்று பெருமளவு இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
'என் குப்பை - என் பொறுப்பு' என்ற கோஷத்துடன் குப்பை மேலாண்மை பணியை ஒரு பெரிய மக்கள் இயக்கமாக துவங்கி, அதில் வெற்றி பெற்றுள்ளது. இதுபோல், ஏற்படும் விழிப்புணர்வு, இதில் மாணவர்கள் காட்டும் ஆர்வம் ஒரு திறவுகோலாக அமைந்துள்ளது. இந்த திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு தனி நபரும் இதனை ஏற்று செயல்பட்டால் திருப்பூர் குப்பை இல்லாத நகரமாக மாற்றம் பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
---
திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளில் ஒன்றான, 'டீ பப்ளிக்' பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.