ADDED : ஜூலை 04, 2024 05:07 AM

போக்குவரதது நெரிசலை தவிர்க்க, பல்லடம் முதல் காரணம்பேட்டை வரையிலான, 12 கி.மீ., விரிவாக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, பல்லடம் -- வெள்ளகோவில் வரை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கின. பல்லடம் -- பொங்கலுார் வரையிலான ரோடு விரிவாக்க பணி நடந்து வருவதால், வாகனங்கள் மாதப்பூர் கிராமத்துக்குள் சென்று மாற்று வழித் தடத்தை பயன்படுத்தி வருகின்றன. இதில், 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளில் விரிவாக்க பணி துரித கதியில் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில், விபத்துகளை தடுக்கும் நோக்கில், மைய தடுப்புகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.