/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தனியார் துறை வேலை வரும் 21ம் தேதி முகாம் தனியார் துறை வேலை வரும் 21ம் தேதி முகாம்
தனியார் துறை வேலை வரும் 21ம் தேதி முகாம்
தனியார் துறை வேலை வரும் 21ம் தேதி முகாம்
தனியார் துறை வேலை வரும் 21ம் தேதி முகாம்
ADDED : ஜூன் 13, 2024 11:54 PM
திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 4வது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி நடக்கிறது. வேலை தேடுவோர் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய விவர படிவத்துடன், காலை, 10:30 மணிக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்கவேண்டும்.
வேலை அளிப்போரும், தங்கள் நிறுவனத்தில் உள்ள காலியிட விவரங்களுடன் முன்பதிவு செய்யவேண்டும். எழுத, படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐ.டி.ஐ., - டிப்ளமோ படித்தவர்கள், தையல் பயிற்சி முடித்தவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். வேலை தேடுவோரும், வேலை அளிப்போரும், https://tnprivatejobs.tn.gov.in/ என்கிற தளத்தில் பதிவு செய்யவேண்டும்.
தனியார் துறை நிறுவனங்களில் பணியில் இணைவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விவரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வருவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிதாக பதிவு செய்வது, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.