/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பணம் இரட்டிப்பு மோசடி புகார் அளிக்க அழைப்பு பணம் இரட்டிப்பு மோசடி புகார் அளிக்க அழைப்பு
பணம் இரட்டிப்பு மோசடி புகார் அளிக்க அழைப்பு
பணம் இரட்டிப்பு மோசடி புகார் அளிக்க அழைப்பு
பணம் இரட்டிப்பு மோசடி புகார் அளிக்க அழைப்பு
ADDED : ஜூலை 10, 2024 11:47 PM
திருப்பூர் : கோவை உடையாம்பாளையத்தில், சர்வா ஐடெக் சொல்யூசன்ஸ் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது.
இந்நிறுவனம், பொதுமக்களிடம் பெறப்படும் முதலீடு தொகைக்கு அதிக வட்டி தருவதாகவும், மேலும் பல்வேறு திட்டங்கள் வாயிலாக அதிக லாபம் பெறலாம் என்று விளம்பரம் செய்தனர். இதை நம்பி, பலர் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்தது.
இதுகுறித்து கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இம்மோசடி வழக்கில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து புகார் அளிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பணம் முதலீடு செய்து கிடைக்கப்பெறாதவர்கள், காலம் தாழ்த்தாமல், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வளாகத்தில் அமைந்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.