/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பட்டாம்பூச்சி பரவசம்... தேனீ ரீங்காரம் தாவரவியல் பூங்கா சிறக்க யோசனை பட்டாம்பூச்சி பரவசம்... தேனீ ரீங்காரம் தாவரவியல் பூங்கா சிறக்க யோசனை
பட்டாம்பூச்சி பரவசம்... தேனீ ரீங்காரம் தாவரவியல் பூங்கா சிறக்க யோசனை
பட்டாம்பூச்சி பரவசம்... தேனீ ரீங்காரம் தாவரவியல் பூங்கா சிறக்க யோசனை
பட்டாம்பூச்சி பரவசம்... தேனீ ரீங்காரம் தாவரவியல் பூங்கா சிறக்க யோசனை
ADDED : ஜூன் 24, 2024 01:35 AM

பல்லடம்;பல்லடம் அடுத்த சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் கிராமத்தில் உள்ள கோவில் நிலத்தில், கிராம மக்கள் இணைந்து, 'போகர் வனம்' என்ற தாவரவியல் பூங்காவை உருவாக்கி பராமரித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன் இங்கு ஆய்வு மேற்கொண்டார்.
அவர் கூறியதாவது:
விவசாயிகளிடம் போதிய தரிசு நிலங்கள் இருந்தால், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு மூலம், மரக்கன்று நட்டுத்தர முடியும். மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டும்போது எடுக்கும் மண்ணில், கீழே இருந்த மண் மேலே வருமாறும், மேலே இருந்த மண் கீழே இருக்குமாறும் குழியை நிரப்பி நடவு செய்ய வேண்டும். இப்படி செய்தால் மரக்கன்றுக்கு கூடுதல் சத்து கிடைக்கும்.
முடிந்தால், குப்பைகள் மற்றும் வேப்பம் புண்ணாக்கு சிறிது போடலாம். மரங்கள் வைக்கும் போது, பட்டாம்பூச்சிகள், பறவைகள், தேனீக்கள் உள்ளிட்ட ஜீவராசிகளை கவரும் வகையில் போதிய இடைவெளியுடன் வகைப்படுத்தி வைக்க வேண்டும். குறிப்பாக, பூக்கும், காய்க்கும் மரங்களால் பல்லுயிர் பெருக்கம் அதிகரிக்கும். அப்படி இருந்தால் பறவைகள் சத்தத்துடன் குறுகிய வனம் போன்று இப்பகுதி ரம்மியமாக இருக்கும் என்பதுடன், எதிர்வரும் தலைமுறைக்கு கல்வி போதிக்கவும் சிறப்பானதாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.