/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆக்கிரமிப்புடன் சுங்கச்சாவடியா? பேச்சுவார்த்தையில் கடும் எதிர்ப்பு ஆக்கிரமிப்புடன் சுங்கச்சாவடியா? பேச்சுவார்த்தையில் கடும் எதிர்ப்பு
ஆக்கிரமிப்புடன் சுங்கச்சாவடியா? பேச்சுவார்த்தையில் கடும் எதிர்ப்பு
ஆக்கிரமிப்புடன் சுங்கச்சாவடியா? பேச்சுவார்த்தையில் கடும் எதிர்ப்பு
ஆக்கிரமிப்புடன் சுங்கச்சாவடியா? பேச்சுவார்த்தையில் கடும் எதிர்ப்பு
ADDED : ஜூலை 08, 2024 10:55 PM

திருப்பூர்:அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை (எண்: 381), சட்ட விதிகளின்படி அமைக்கவில்லை; வாகன ஓட்டிகளுக்கு அடிப்படை வசதிக செய்யாமல், சுங்கம் வசூலிக்க சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சுங்கம் இல்லாத சாவடியாக அறிவிக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் தீர்வு காண, நேற்று காலை, சப் கலெக்டர் சவுமியா தலைமையில், அமைதிப்பேச்சு நடந்தது
அதில், சுங்கச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பேசியதாவது:
என்.எச்., ரோட்டில், சுங்கச்சாவடி அமைக்க, குறைந்தபட்சம், 60 கி.மீ., நீளமுள்ள ரோடாக இருக்க வேண்டும்; மாறாக, 381 எண் ரோடு, 31.8 கி.மீ., நீளம் மட்டுமே உள்ளது. சுங்கசாவடியில் இருந்து, 4.5 வது கி.மீ., துாரத்தில் மாநகராட்சி எல்லை துவங்குகிறது. மாநகராட்சி எல்லையில் இருந்து 10 கி.மீ.,க்கு அப்பால் தான் சுங்கச்சாவடி அமைய வேண்டும்.
அவிநாசியில் இருந்து, அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் என, 24 கி.மீ., துாரம் நகர எல்லையில் ரோடு அமைந்துள்ளது. எட்டு கி.மீ., மட்டுமே ஊராட்சி பகுதியாக இருக்கிறது. சர்வீஸ் ரோடுகள் இருக்க வேண்டும் என்ற விதியும் பின்பற்றப்படவில்லை. இந்த ரோட்டில், 80 இடங்களில், கிராம ரோடு சந்திப்பு உள்ளது. உஷா தியேட்டர் துவங்கி, பூண்டி வரை, 15 சிக்னல் உள்ளது.
இப்படி, எவ்வித வசதியும் இல்லாத ரோட்டில், சுங்கச்சாவடி அமைக்க கூடாது. சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், குட்டையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால், 90 நாட்களுக்குள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆறு ஆண்டுகளாக, ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. ஐகோர்ட் உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் பேசினார்.
அடிப்படை வசதியில்லாமல், சுங்கச்சாவடி அமைக்க விதிவிலக்கு உள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படியெனில், அதற்கான ஆவண ஆதாரங்களை காண்பிக்குமாறு, விவசாயிகள் கேட்டனர். விரைவில் ஆதாரங்களை வழங்கி, ஐகோர்ட் உத்தரவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
-----------------------
திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில், நடந்த வேலம்பட்டி சுங்கச்சாவடி அமைதிப்பேச்சு வார்த்தையில் பங்கேற்றவர்கள்.