ADDED : ஆக 06, 2024 11:29 PM
திருப்பூர் : தாராபுரம் சாரா செவிலியர் கல்லுாரி சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஊழியர்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள், போலீசார் இணைந்து தாய்ப்பால் வாரம் முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு ஊர்வலம் துவங்கியது.
மாணவியர்கள் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தும், தாய்ப்பால் சிறப்பு குறித்த பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டனர்.