/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆழ்துளை கிணறு உடைப்பு பொதுமக்கள் சாலை மறியல் ஆழ்துளை கிணறு உடைப்பு பொதுமக்கள் சாலை மறியல்
ஆழ்துளை கிணறு உடைப்பு பொதுமக்கள் சாலை மறியல்
ஆழ்துளை கிணறு உடைப்பு பொதுமக்கள் சாலை மறியல்
ஆழ்துளை கிணறு உடைப்பு பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 08, 2024 11:48 PM
பல்லடம்:கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மாளப்பட்டி கிராமத்தில் புதிதாக இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இதற்கு, இப்பகுதியை சேர்ந்த ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் மர்ம நபரால் உடைக்கப்பட்டது.
இதையடுத்து, ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்துக்கு செல்லும் குடிநீர் வினியோகம் தடைபட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அங்கு, உரிய தீர்வு கிடைக்காததை தொடர்ந்து, பல்லடம் -- பொள்ளாச்சி ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணறுகளை உடைத்த மர்ம நபரை கைது செய்ய வேண்டும் என்றும், கிராமத்துக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால், பல்லடம் -- பொள்ளாச்சி ரோட்டில், சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.