/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பாரிவாஹன்' மூலம் முன்பதிவு ஏழு நாளுக்கு சாத்தியம் இல்லை; தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் 'பிஸி' 'பாரிவாஹன்' மூலம் முன்பதிவு ஏழு நாளுக்கு சாத்தியம் இல்லை; தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் 'பிஸி'
'பாரிவாஹன்' மூலம் முன்பதிவு ஏழு நாளுக்கு சாத்தியம் இல்லை; தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் 'பிஸி'
'பாரிவாஹன்' மூலம் முன்பதிவு ஏழு நாளுக்கு சாத்தியம் இல்லை; தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் 'பிஸி'
'பாரிவாஹன்' மூலம் முன்பதிவு ஏழு நாளுக்கு சாத்தியம் இல்லை; தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் 'பிஸி'
ADDED : ஜூன் 14, 2024 04:44 AM

திருப்பூர் : வட்டார போக்குவரத்து துறையின் 'பாரிவாஹன்' இணையதள முகவரியில் லைசன்ஸ் முன்பதிவு பக்கம் எப்போதும் 'பிஸி'யாக உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்து, பணம் செலுத்தி விட்டாலும், முன்பதிவுக்கு முயற்சித்தால், ஒரு வாரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பயனாளர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில், பெரும்பாலான நடவடிக்கைகள் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப் படுகிறது. எல்.எல்.ஆர்., டிரைவிங் லைசன்ஸ், புதுப்பித்தல், வாகன புதிய பதிவு, தகுதிச்சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று ஒப்புதல் பெற வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்து, பணம் செலுத்தியவுடன், ஆர்.டி.ஓ., அலுவலரை சந்திக்கும் முன்பதிவுக்கான தேதியை பயனாளர்களே தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப் படுகிறது. ஆனால், அடுத்த ஏழு நாட்களுக்கு முன்பதிவுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலக நடவடிக்கைக்கு, https://vahan.parivahan.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, பணம் செலுத்திய பின், முன்பதிவு தேதியை தேர்வு செய்தால், ஏற்கனவே அடுத்து ஏழு நாட்கள் முன்பதிவு முடிந்து விட்டதாக, பதில் வருகிறது.
மறுநாள், அதற்கு அடுத்து இரு நாட்கள் கழித்து முன்பதிவுக்கு முயற்சித்தாலும், ஒரு வாரம் முன்பதிவு முடிந்து விட்டதாக இணையதள பக்கத்தில் பதில் வருவதால், பயனாளர்கள் குழப்பம் அடைகின்றனர். தொடர் தாமதத்தால், பணம் செலுத்திய பின், நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை பயனாளர்களுக்கு ஏற்படுகிறது.
தெற்கு ஆர்.டி.ஓ., ஆனந்த் கூறுகையில், 'ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் குறிப்பிட்ட சில பணிகளுக்கு, முன்பதிவு கட்டாயம். அடுத்த ஒரு வாரத்துக்கு மட்டுமே முன்பதிவு திறப்பது பொதுவான நடைமுறை.
முன்கூட்டியே பதிவு செய்பவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. தெற்கில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகம், நடப்பு மாதம் விண்ணப்பிப்பவர்கள் அதிகம் என்பதால், முன் பதிவு 'பிஸி'யாக உள்ளது,' என்றார்.