/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொத்தடிமை தொழிலாளர் 4 பேர் மீட்பு: அதிகாரிகள் விசாரணை கொத்தடிமை தொழிலாளர் 4 பேர் மீட்பு: அதிகாரிகள் விசாரணை
கொத்தடிமை தொழிலாளர் 4 பேர் மீட்பு: அதிகாரிகள் விசாரணை
கொத்தடிமை தொழிலாளர் 4 பேர் மீட்பு: அதிகாரிகள் விசாரணை
கொத்தடிமை தொழிலாளர் 4 பேர் மீட்பு: அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜூன் 21, 2024 12:26 AM
உடுமலை;உடுமலை அருகே, மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழு வாயிலாக, கொத்தடிமைத்தொழிலாளர்கள், 4 பேர் மீட்கப்பட்டனர்.
மடத்துக்குளம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் விஜயகுமாரிடம், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கஸ்துாரி, தங்களது பெற்றோர் ராமு, விஜயா ஆகியோர் கரும்பு வெட்டும் வேலைக்கு அழைத்து வந்து, கொத்தடிமை போல் நடத்தப்படுவதாகவும், ஊருக்கு அனுப்புவதில்லை, புகார் அளித்தார்.
இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, கொமரலிங்கம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதிகாரிகள் குழு, சங்க ராமநல்லுார் கிராமம், குளத்தின் அருகே உள்ள கரும்புத்தோட்டத்தில், தங்கியிருந்தவர்களை கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், ராமு, 51, விஜயா, 49, உறவினர் தனுஷ், 25 மற்றும் ஆகியோர் மீட்கப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் பயன்பாடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.