/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சி.ஏ., மாணவர்களுக்கு 'ஞானம்' தர 'போதி' சி.ஏ., மாணவர்களுக்கு 'ஞானம்' தர 'போதி'
சி.ஏ., மாணவர்களுக்கு 'ஞானம்' தர 'போதி'
சி.ஏ., மாணவர்களுக்கு 'ஞானம்' தர 'போதி'
சி.ஏ., மாணவர்களுக்கு 'ஞானம்' தர 'போதி'
ADDED : ஜூன் 29, 2024 02:18 AM

திருப்பூர்;திருப்பூர் கிளை இந்திய பட்டய கணக்காளர் சங்கம் சார்பில், சி.ஏ., பயிலும் மாணவர்களுக்கான மாநில அளவிலான, 2 நாள் கருத்தரங்கம் 'போதி' என்ற தலைப்பில், ராயபுரம் சங்கத்தில் நேற்று துவங்கியது. தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தருண், 'சிகாசா' தலைவர் சரவண ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் வரவேற்றார். மேயர் தினேஷ்குமார், இந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ஜலபதி ஆகியோர் துவக்கிவைத்தனர்.
'போதி' என்ற தலைப்பில், அறிவு, இணைப்பு மற்றும் வெற்றி பெறு என்ற கருத்துகளின் அடிப்படையில் நடைபெறும் கருத்தரங்கில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், 'சிஏ' பயிலும் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த முதல் நாள் கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளின் கீழ் முன்னணி ஆடிட்டர்கள், துறை வல்லுனர்கள் பேசினர். இன்று இரண்டாம் நாள் மாநாட்டிலும் பல்வேறு வல்லுனர்கள் பேசவுள்ளனர்.
முன்னதாக, கருத்தரங்கை துவக்கி வைத்து மேயர் தினேஷ்குமார் பேசுகையில், ''வலிமையான நாடு, வளர்ச்சி பெற்ற நாடு என்ன குறிக்கோளை நோக்கி செல்லும் போது அதில் ஆடிட்டர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்பது மறுக்க முடியாது. சி.ஏ., பயிலும் மாணவர்கள் சிறப்பான முறையில் தங்கள் படிப்பை முடித்து இந்நாட்டின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்'' என்றார்.
---
மேயர் படத்தை 'கட்' செய்துவிடவும்
சி.ஏ., பயிலும் மாணவர்களுக்கு திருப்பூர், ராயபுரத்தில் இந்திய பட்டயக் கணக்காளர் சங்க கிளை அலுவலகத்தில் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கு துவங்கியது. இதில் பங்கேற்ற இந்திய பட்டய கணக்காளர் சங்க நிர்வாகிகள்.