/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆண்டிபாளையம் குளத்தில் 'போட் ஜெட்டி' அமைப்பு ஆண்டிபாளையம் குளத்தில் 'போட் ஜெட்டி' அமைப்பு
ஆண்டிபாளையம் குளத்தில் 'போட் ஜெட்டி' அமைப்பு
ஆண்டிபாளையம் குளத்தில் 'போட் ஜெட்டி' அமைப்பு
ஆண்டிபாளையம் குளத்தில் 'போட் ஜெட்டி' அமைப்பு
ADDED : ஜூலை 28, 2024 12:00 AM

திருப்பூர்:ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி மேற்கொள்வதற்கான 'போட் ஜெட்டி' அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் - மங்கலம் ரோட்டில், 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்துள்ளது. திருப்பூர் மக்களுக்கு பொழுது போக்கு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரி துவக்க, சுற்றுலா துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கென அரசின் சார்பில், 1.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டிபாளையம் குளத்தில், படகு இல்லம், பார்வையாளர் மாடம், உணவகம், டிக்கெட் கவுன்டர், குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. படகு சவாரிக்கான 'போட் ஜெட்டி' அமைக்கப்பட்டுள்ளது.---