/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாடல் நோய் கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு விளக்கம் வாடல் நோய் கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு விளக்கம்
வாடல் நோய் கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு விளக்கம்
வாடல் நோய் கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு விளக்கம்
வாடல் நோய் கட்டுப்பாடு: விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : ஜூன் 17, 2024 11:20 PM

உடுமலை:தென்னை வாடல் நோய் குறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் குடிமங்கலம் வட்டாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. அவ்வட்டாரத்தில், மூங்கில்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில், தென்னை மரங்களில் நோய்த்தாக்குதல் கண்டறியப்பட்டு, தோட்டக்கலைத்துறை சார்பில், நோய்த்தடுப்பு பணிகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் மோகனரம்யா, கோவை வேளாண் பல்கலை., பொங்கலுார் விரிவாக்க மைய தலைவர் சரவணன் உள்ளிட்ட குழுவினர் வீதம்பட்டி பகுதியில், ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப்பிறகு, தென்னையில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
குறிப்பாக, அசோஸ்பைரலம், பாஸ்போபாக்டீரியா, பேசிலசப்சிலர்ஸ், விரிடி, 'வேம்', தென்னை டானிக் மற்றும் 'கோக்கோகான்' பயன்படுத்தும் முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஞானசேகரன், துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
ஏற்பாடுகளை, தோட்டக்கலை உதவி அலுவலர் ராஜசேகரன், சரவணகுமார் மற்றும் மதன் செய்திருந்தனர்.