/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ஸ்மார்ட் போன்' பெற பயனாளிகள் தேர்வு 'ஸ்மார்ட் போன்' பெற பயனாளிகள் தேர்வு
'ஸ்மார்ட் போன்' பெற பயனாளிகள் தேர்வு
'ஸ்மார்ட் போன்' பெற பயனாளிகள் தேர்வு
'ஸ்மார்ட் போன்' பெற பயனாளிகள் தேர்வு
ADDED : ஜூலை 10, 2024 12:21 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், ஸ்மார்ட் போன் பயனாளிகள் தேர்வு முகாம், கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், கண் தெரியாத, காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகள், 120 பேர் பங்கேற்றனர். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சாம்சாந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த் ராம்குமார், பார்வையற்றோர் சங்க பிரதிநிதி சக்கரையப்பன், காதுகேளாத, வாய் பேசாதோர் சங்க பிரதிநிதி ரமேஷ் ஆகியோர் குழுவினர், ஸ்மார்ட் போனுக்கான பயனாளிகளை தேர்வு செய்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நேற்று, ஸ்மார்ட் போன் பெறுவதற்காக வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் குமார், மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு, குரூப் - 2 தேர்வு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலைவாய்ப்பு துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.