/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிராமங்களில் அடிப்படை வசதி; சுப்பராயன் சாதித்து காட்டுவாரா? கிராமங்களில் அடிப்படை வசதி; சுப்பராயன் சாதித்து காட்டுவாரா?
கிராமங்களில் அடிப்படை வசதி; சுப்பராயன் சாதித்து காட்டுவாரா?
கிராமங்களில் அடிப்படை வசதி; சுப்பராயன் சாதித்து காட்டுவாரா?
கிராமங்களில் அடிப்படை வசதி; சுப்பராயன் சாதித்து காட்டுவாரா?
ADDED : ஜூன் 05, 2024 12:39 AM
திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி., சுப்பராயன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், இரண்டாவது முறையாக இந்திய கம்யூ., வெற்றி பெற்று, தொகுதியை தக்க வைத்துள்ளது. 'சிட்டிங்' எம்.பி., சுப்பராயன், தொடர்ந்து எம்.பி.,யாக பணியாற்ற மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய இத்தொகுதி, பனியன், விவசாயம், தொழிற்சாலைகள், ஜமுக்காளம், விசைத்தறி என, பலவகை தொழில்களை பெற்றுள்ளது.
கடந்த 2009, 2014ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக, இருமுறை அ.தி.மு.க., வென்றது போல், இந்திய கம்யூ., கட்சியும் தொகுதியில் வென்றுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின் தொழில் நிலை கவலைக்கிடமாக மாறியது. தற்போது, படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் எம்.பி., கடந்த ஐந்தாண்டுகளில், தொகுதிகளுக்குள் சரிவர வலம்வரவில்லை. தொகுதி வளர்ச்சி நிதியில் செய்த பணி விவரம் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை.
கடும் போட்டிக்கு மத்தியில், மக்கள் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளதால், இனியாவது கிராமப்புற மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்க வேண்டும்.
ஒட்டுமொத்த பனியன் தொழில் மேம்பட, பார்லிமென்டில் குரல்கொடுக்க வேண்டும். குறிப்பாக, திருப்பூர் பனியன் தொழில் மேம்பட, பனியன் தொழில் வாரியம் அமைக்க சிறப்பு கவனம் செலுத்தி பாடுபட வேண்டும்.
பருத்தி கொள்முதல்
பனியன் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு சவாலாக இருப்பது, அபரிமிதமான வங்கதேச ஆடை இறக்குமதி; பனியன் தொழிலை பாதுகாக்க, வங்கதேச ஆடை இறக்குமதிக்கு தேவையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
தொகுதி வளர்ச்சி நிதியாக, ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்யப்படும்; அதன் மூலம், கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது, தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.