/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உருக்கட்டை தாக்குதல் 'பார்' ஊழியர்கள் கைது உருக்கட்டை தாக்குதல் 'பார்' ஊழியர்கள் கைது
உருக்கட்டை தாக்குதல் 'பார்' ஊழியர்கள் கைது
உருக்கட்டை தாக்குதல் 'பார்' ஊழியர்கள் கைது
உருக்கட்டை தாக்குதல் 'பார்' ஊழியர்கள் கைது
ADDED : ஜூலை 18, 2024 10:59 PM
பல்லடம்:பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, காளிநாதம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 37; பனியன் தொழிலாளி. அய்யம்பாளையத்தை சேர்ந்த ஜெரால்டு, 25 மற்றும் ஆரோக்யசாமி, 25. இருவரும், அய்யம்பாளையம் டாஸ்மாக் 'பாரில்' உதவியாளர்கள்.
நேற்று முன்தினம் மாலை, சதீஷ்குமார் டூவீலரில் சென்றபோது, ஜெரால்டு மற்றும் ஆரோக்யசாமி காரில் வந்தனர். கார் மீது டூ வீலர் உரசிய நிலையில், இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சதீஷ்குமாரை, ஜெரால்டு, ஆரோக்கியசாமி ஆகியோர் தாக்கி காயப்படுத்தினர்.
இதையடுத்து, சதீஷ்குமார், தனது உறவினர்கள், ஜெரால்டு வீட்டை முற்றுகையிட்டனர். இதில், உருட்டு கட்டையால் தாக்கியதில், சதீஷ்குமார் காயமடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார், ஜெரால்டு, ஆரோக்கியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.