/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பலத்த காற்றுக்கு சாயும் வாழை நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு பலத்த காற்றுக்கு சாயும் வாழை நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு
பலத்த காற்றுக்கு சாயும் வாழை நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு
பலத்த காற்றுக்கு சாயும் வாழை நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு
பலத்த காற்றுக்கு சாயும் வாழை நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:42 AM

உடுமலை;உடுமலை ஏழு குள பாசன திட்ட பகுதி மற்றும் நீர் வளம் மிக்க இடங்களில், பூவன் மற்றும் இலை தேவைக்கான வாழை ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
வாழை சாகுபடியில், பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதே விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
வழக்கமாக, வாழை சாகுபடி விளைநிலங்களில், காற்றுத்தடுப்பானாக உயரமாக வளரும் அகத்தி மரக்கன்றுகளை, நடவு செய்து பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, உடுமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், மலையாண்டிபட்டணம் உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்த வாழை மரங்கள் சாய்ந்து விட்டது.
வாழைத்தார்களுடன் அறுவடைக்கு தயாராகி வந்த வாழை மரங்கள் சாய்ந்துள்ளதால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விளைநிலங்களில், வரப்பு ஓரத்தில் உள்ள வாழை மரங்களே காற்றின் வேகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில், காற்றினால் பாதிப்பை தவிர்க்க, வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுத்தல், கயிறு கொண்டு கட்டுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.