/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாலாலயம் ஒரு ஆண்டு நிறைவு :கோவில் திருப்பணி தொய்வு பாலாலயம் ஒரு ஆண்டு நிறைவு :கோவில் திருப்பணி தொய்வு
பாலாலயம் ஒரு ஆண்டு நிறைவு :கோவில் திருப்பணி தொய்வு
பாலாலயம் ஒரு ஆண்டு நிறைவு :கோவில் திருப்பணி தொய்வு
பாலாலயம் ஒரு ஆண்டு நிறைவு :கோவில் திருப்பணி தொய்வு
ADDED : ஜூன் 07, 2024 12:58 AM
பல்லடம்;பல்லடம்-, மங்கலம் ரோட்டில், பழமை வாய்ந்த ஸ்ரீசெல்வ விநாயகர் - பாலதண்டபாணி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவிலில், நீண்ட காலத்துக்குப் பின் திருப்பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
கோவிலை சுற்றியுள்ள அறநிலையத் துறைக்கு சொந்தமான கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து, 2023 மே மாதம் பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவடைந்த நிலையில், திருப்பணி துவங்கு வதற்கான முகாந்திரமே இல்லாமல் உள்ளது.
பால தண்டபாணி கோவில் கட்டுமான பணி துவங்குவதற்காக கோவில் ஸ்தபதியிடம் வரைபட அனுமதி கேட்டு விண்ணப்பித்ததில் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.
லோக்சபா தேர்தல் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து, திருப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலாலயம் முடிந்து ஓராண்டு முடிந்தும் திருப்பணிகள் துவங்கப்படாமல் உள்ளன.
தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. திருப்பணி காரணமாக, வழக்கமாகக் கொண்டாடப்படும் விழாக்கள் அனைத்தும் தடை பட்டுள்ளன.
விழாக்கள், பண்டிகைகள் தடையின்றி வழக்கம்போல் நடக்க, திருப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.