Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

ADDED : ஜூன் 11, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
உடுமலை:உடுமலையில், பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு போட்டி நடந்தது.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சார்பில் சர்வதேச சுற்றுசூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

போட்டிகள் பொள்ளாச்சி ரோட்டிலுள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை அரங்கில் நடந்தது. பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார்.

ஒன்று முதல் பிளஸ் 2 வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு தலைப்புகளில் ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி நடந்தது. பொள்ளாச்சி, பழநி பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பதன் அவசியம் குறித்து, கோவை சதாசிவம் பேசினார்.

உடுமலை சுற்றுச்சூழல் சங்கத்தலைவர் மணி, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் முக்கியத்துவத்தையும், பல்லுயிர் பெருக்கம் குறித்தும் பேசினார்.

அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ், தேஜஸ் ரோட்டரி சங்க தலைவர் லோகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இதில், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் ஒரு நாள் களப்பயணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

மாணவர்களுக்கு ஈசாப் வங்கியின் சார்பில், விதை பேனாக்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us