ADDED : ஜூலை 31, 2024 12:57 AM
திருப்பூர்;தமிழக போலீஸ் துறையில் ஆண்டு தோறும் மாநகரம், மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
சட்டம்-ஒழுங்கு, வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்தல், ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படையின் படியில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்படுகிறது.
கடந்த, 2022ல் திருப்பூர் மாநகர போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில், வடக்கு ஸ்டேஷன் தேர்ந்தெடுக்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், இன்ஸ்பெக்டர் உதயகுமாரிடம், கேடயம் வழங்கினார்.