/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செயற்கை வறட்சி; விவசாயிகள் அதிருப்தி கேரளாவுக்கு செல்லும் பி.ஏ.பி., பாசன நீர் செயற்கை வறட்சி; விவசாயிகள் அதிருப்தி கேரளாவுக்கு செல்லும் பி.ஏ.பி., பாசன நீர்
செயற்கை வறட்சி; விவசாயிகள் அதிருப்தி கேரளாவுக்கு செல்லும் பி.ஏ.பி., பாசன நீர்
செயற்கை வறட்சி; விவசாயிகள் அதிருப்தி கேரளாவுக்கு செல்லும் பி.ஏ.பி., பாசன நீர்
செயற்கை வறட்சி; விவசாயிகள் அதிருப்தி கேரளாவுக்கு செல்லும் பி.ஏ.பி., பாசன நீர்
ADDED : ஜூலை 31, 2024 02:32 AM

திருப்பூர்:'பி.ஏ.பி., நீர்நிலைகள் நிரம்பி வரும் நிலையில், நீர் மேலாண்மையில் உள்ள குறைபாடால், பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், நிரம்பி வழியும் நீர், கேரளாவுக்கு திறந்து விடப்படுகிறது' எனவும் விவசாயிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து, பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளைக்கால்வாய் காங்கயம் - வெள்ளகோவில் கிளை நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
பருவமழையால் பி.ஏ.பி., நீராதார பகுதிகளில் நீர் நிரம்பியுள்ளது. காண்டூர் கால்வாய் சீரமைப்புபணியை நிறுத்தி, பாசனத்துக்கு நீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், சோலையாறு, துாணக்கடவு அணைகளில் இருந்து, கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கேரளா அரசு, ஏற்கனவே பெரு மழையால் வெள்ள பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. பி.ஏ.பி., தண்ணீரை திறந்துவிட வேண்டாம் என, அம்மாநில அரசு அதிகாரபூர்வமாகவே தெரிவித்து விட்டது. இருப்பினும், பி.ஏ.பி., அதிகாரிகளின் தவறான நீர் மேலாண்மையால், பி.ஏ.பி., பாசனத்துக்கான தண்ணீர் வினியோகம் தடைபட்டிருக்கிறது.
கால்வாயின் கடைமடையாக உள்ள திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலுார், உடுமலை, குண்டடம், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பல இடங்களில் கடும் வறட்சி ஏற்படுகிறது. கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் இருந்தும், செயற்கை வறட்சி நிலவுகிறது. இந்த விஷயத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.