/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிலக்கடலை பயிர் காப்பீடு விண்ணப்பிக்க ஆர்வம் ஏற்க மறுக்கின்றனவா கூட்டுறவு சங்கங்கள் நிலக்கடலை பயிர் காப்பீடு விண்ணப்பிக்க ஆர்வம் ஏற்க மறுக்கின்றனவா கூட்டுறவு சங்கங்கள்
நிலக்கடலை பயிர் காப்பீடு விண்ணப்பிக்க ஆர்வம் ஏற்க மறுக்கின்றனவா கூட்டுறவு சங்கங்கள்
நிலக்கடலை பயிர் காப்பீடு விண்ணப்பிக்க ஆர்வம் ஏற்க மறுக்கின்றனவா கூட்டுறவு சங்கங்கள்
நிலக்கடலை பயிர் காப்பீடு விண்ணப்பிக்க ஆர்வம் ஏற்க மறுக்கின்றனவா கூட்டுறவு சங்கங்கள்
ADDED : ஜூலை 18, 2024 10:45 PM
திருப்பூர்;நிலக்கடலை, சோளம், மக்காசோளம் பயிருக்கு காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காப்பீடுக்கு விண்ணப்பிக்க கூட்டுறவு சொசைட்டிகள் மறுப்பு தெரிவிக்கின்றன என்ற புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், மானவாரி பயிராக, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மூன்றாண்டாக நிலக்கடலைக்கு காப்பீடு அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.நிலக்கடலை விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு காப்பீடுக்கான பிரிமிய தொகையாக, 636 ரூபாய் செலுத்த வேண்டும். நிலக்கடலையில் மகசூல் குறைந்தாலோ, பயிர் இழப்பு ஏற்பட்டாலோ இழப்பீடு தொகையாக, ஏக்கருக்கு, 31 ஆயிரத்து 800 ரூபாய் கிடைக்கும். அதே போன்று, சோளம், மக்காசோளம் பயிருக்கும் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.பயிர்க்காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்களின் ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ் புத்தக முன்பக்க நகல், சிட்டா, கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட நடப்பு பசலி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், அருகில் உள்ள இ-சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தொடர்பு கொண்டு, விண்ணப்பித்து கொள்ளலாம்; நிலக்கடலை மற்றும் சோளத்துக்கு காப்பீடுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம், (ஜூலை) 30ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, ஏராளமான விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். ஆனால், கூட்டுறவு சொசைட்டிகளில் காப்பீடுக்கு விண்ணப்பிக்க நிர்வாகத்தினர் மறுக்கின்றனர் என, விவசாயிகள் கூறுகின்றனர். 'இதுதொடர்பாக தங்களுக்கு அதிகாரபூர்வ உத்தரவு வரவில்லை' என சொசைட்டி நிர்வாகத்தினர் கூறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.