ADDED : ஜூன் 06, 2024 11:54 PM
உடுமலை;ஸ்பின்னிங் மற்றும் தொழில் நுட்ப ஜவுளி பிரிவுகளில், பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சிட்ரா) சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்து, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, ஸ்பின்னிங் மற்றும் தொழில் நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேற்படி பயிற்சியை பெற விரும்புபவர்கள், https//tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணைய தள முகவரில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, ஜவுளித்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ, 0421 - 2220095 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.