/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பூங்காவை சீரழிக்கும் சமூக விரோதிகள் பூங்காவை சீரழிக்கும் சமூக விரோதிகள்
பூங்காவை சீரழிக்கும் சமூக விரோதிகள்
பூங்காவை சீரழிக்கும் சமூக விரோதிகள்
பூங்காவை சீரழிக்கும் சமூக விரோதிகள்
ADDED : ஜூலை 07, 2024 11:04 PM
திருப்பூர்:பல்லடம் அடுத்த, காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், பொதுமக்கள் தாவரவியல் பூங்கா அமைத்து பராமரித்து வருகின்றனர்.
''பசுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், தேசிய நெடுஞ்சாலை இடத்தில், சொட்டுநீர் பாசனம் அமைத்து மிகவும் சிரமப்பட்டு நூற்றுக்கணக்கான மரங்களுடன் தாவரவியல் பூங்கா அமைத்து பராமரித்து வருகிறோம். சோலை போல் காட்சியளித்து வருகிறது. இரவு நேரங்களில் சில சமூக விரோதிகள், தவறான செயல்களில் ஈடுபட்டு, பூங்காவை சீரழித்து வருகின்றனர். மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் 'பலான' பொருட்கள் என, பூங்காவை நாசமாக்குவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில், போலீசார், இப்பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு சமூக விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், இப்பகுதி சமூக விரோத செயல்களுக்கு புகலிடமாக மாறிவிடும்'' என்கின்றனர் பொதுமக்கள்.