/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அண்ணன்மார் கதை கிராம மக்கள் ஆர்வம் அண்ணன்மார் கதை கிராம மக்கள் ஆர்வம்
அண்ணன்மார் கதை கிராம மக்கள் ஆர்வம்
அண்ணன்மார் கதை கிராம மக்கள் ஆர்வம்
அண்ணன்மார் கதை கிராம மக்கள் ஆர்வம்
ADDED : ஜூலை 07, 2024 10:41 PM

பல்லடம்:சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.குமாரபாளையம் கிராமத்தில், படுகளம் நிகழ்வு நடந்தது. இதை முன்னிட்டு, அண்ணன்மார் கதைப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
மாயவர் கலை குழு சார்பில், வாரப்பட்டி ஆறுமுகம், பல்லடம் விஜய், திருப்பூர் கோபாலகிருஷ்ணன் ஆகிய கலைஞர்கள் வேடமணிந்தபடி அண்ணன்மார் கதைப்பாட்டு பாடி கதையை விவரித்தனர். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த கதைப்பாட்டு நிகழ்ச்சியில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று ஆர்வத்துடன் கேட்டு, பார்த்து ரசித்தனர். மாயவர் கலைக்குழு கலைஞர்கள் ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டப்பட்டனர்.