/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை
தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை
தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை
தலையில் கல்லால் தாக்கி முதியவர் கொலை
ADDED : ஜூலை 05, 2024 12:52 AM
அனுப்பர்பாளையம்;குன்னத்துார் அடுத்த சின்னேகவுண்டன் வலசு ஊராட்சி, கருங்கல் மேடு பகுதியில் உள்ள முட்புதரில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது.
குன்னத்துார் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில், இறந்த நபர், திருப்பூர், பி.என்.,ரோடு, சிவன் தியேட்டர் பகுதியை சேர்ந்த சந்திரன், 50 என்பதும் கட்டட தொழிலாளி என்பதும் தெரிந்தது.
இரண்டு நாள் முன் வீட்டை விட்ட வெளியேறிய அவர், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள் ளார். மது குடிக்க வந்தவருக்குள் மோதல் ஏற்பட்டு கொலை நடந்ததா அல்லது வழிப்பறியில் கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.