/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெள்ளி விழா கண்ட அன்னதானக் கமிட்டி வெள்ளி விழா கண்ட அன்னதானக் கமிட்டி
வெள்ளி விழா கண்ட அன்னதானக் கமிட்டி
வெள்ளி விழா கண்ட அன்னதானக் கமிட்டி
வெள்ளி விழா கண்ட அன்னதானக் கமிட்டி
ADDED : ஜூன் 24, 2024 02:14 AM

அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டியின் 25ம் ஆண்டு வெள்ளி விழா, அன்னதான கமிட்டி தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியம், கோவில் சிவாச்சாரியார் சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தலைக்காவேரி தீர்த்த யாத்திரை குழு பூபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வாகீசர் மடாலய ஆதினம் காமாட்சி தாச சுவாமிகள் அருளுரை வழங்கி பேசுகையில், ''1996ல் துவங்கப்பட்ட இந்த கமிட்டி, தலைவர் நடராஜன், செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் அப்புசாமி ஆகியோரது நற்முயற்சியால், 140 உறுப்பினர்களுடன் 27 ஆண்டுகளைக் கடந்துள்ளது. கும்பாபிேஷகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களின்போது, தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கம் அர்ப்பணிக்கப்பட்டது. இறைப்பணியைத் தொடர்வோருக்கு வாழ்த்துகள்'' என்றார். ஈஸ்வரன், சுப்ரமணியம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.