/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரண்மனைப்புதுார் பள்ளி மாணவர்களுக்கு உதவி அரண்மனைப்புதுார் பள்ளி மாணவர்களுக்கு உதவி
அரண்மனைப்புதுார் பள்ளி மாணவர்களுக்கு உதவி
அரண்மனைப்புதுார் பள்ளி மாணவர்களுக்கு உதவி
அரண்மனைப்புதுார் பள்ளி மாணவர்களுக்கு உதவி
ADDED : ஜூலை 04, 2024 05:12 AM

திருப்பூர் : 'அன்புடன் திருப்பூர் அறக்கட்டளை' தலைவரும், கிட்ஸ் கிளப் கல்விக்குழுமங்களின் தலைவருமான மோகன் கார்த்திக், தான் படித்த அரண்மனைப்புதுார் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று, பார்வையிட்டார்.
நர்சரி பள்ளிக்குழந்தைகள், 50 பேர் உட்பட பள்ளியில் படிக்கும், 400 மாணவ, மாணவியருக்கு காலணி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாயிலாக, பள்ளிக்குழந்தைகளுக்கு காலணிகள் வழங்கப்பட்டன.
மோகன் கார்த்திக் கூறுகையில், ''சிறு வயதில் படித்த பள்ளிக்கு சென்று பார்வையிடுவது, திருப்தியளிக்கிறது. அந்த பள்ளியில் படிக்கும் நர்சரி குழந்தைகளுக்கு காலணி வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்,'' என்றார்.