/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விவசாய செய்தி தென்னைக்கு ஊட்டச்சத்து 'டானிக்'! செலுத்த வழிகாட்டுதல் விவசாய செய்தி தென்னைக்கு ஊட்டச்சத்து 'டானிக்'! செலுத்த வழிகாட்டுதல்
விவசாய செய்தி தென்னைக்கு ஊட்டச்சத்து 'டானிக்'! செலுத்த வழிகாட்டுதல்
விவசாய செய்தி தென்னைக்கு ஊட்டச்சத்து 'டானிக்'! செலுத்த வழிகாட்டுதல்
விவசாய செய்தி தென்னைக்கு ஊட்டச்சத்து 'டானிக்'! செலுத்த வழிகாட்டுதல்
ADDED : ஜூலை 08, 2024 01:14 AM
உடுமலை:தென்னை மரங்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து, வளர்ச்சி ஊக்கிகளை உள்ளடக்கிய, டானிக்கை வேரில் செலுத்தும் முறை குறித்து கோவை வேளாண் பல்கலை., வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
அதில், தமிழ்நாடு வேளாண் பல்கலை., சார்பில், தென்னை மரங்களுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளையும், வளர்ச்சி ஊக்கிகளையும் சரியான விகிதத்தில், கலந்து டானிக் தயாரிக்கப்படுகிறது.
தென்னை மரத்திலிருந்து சுமார், 4 முதல் 6 அடி தள்ளி 4 அங்குல ஆழத்துக்கும் கீழ் அமைந்திருக்கும் புதிய பென்சில் தடிமனுடைய செம்பழுப்பு நிற உறிஞ்சும் வேர்களை தேர்வு செய்ய வேண்டும்.
வேர் நுனியை சீவி, 40 மில்லி அடர் தென்னை டானிக்குடன், 160 மில்லி துாய தண்ணீரை கலந்து, மெல்லிய பாலித்தீன் பையில் நிரப்பி, வேரின் நுனி, பாலித்தீன் பையின் இறுதி பகுதி வரை வைத்து கட்ட வேண்டும்.
டானிக் கட்டிய, 24 மணி நேரத்துக்குள் முழுவதும் உறிஞ்சப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறோரு புதிய வேரை தேர்வு செய்து, மீண்டும் கட்ட வேண்டும்.
மழைக்காலங்களில் கட்டுவதை தவிர்க்கலாம். வேரை தேர்வு செய்ய அகல குழி எடுப்பதை தவிர்த்து, காயமின்றி வேரை தேர்வு செய்ய வேண்டும். ஆண்டுக்கு இரு முறை தென்னை டானிக் கட்ட வேண்டும்,' இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.