/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வக்கீல்கள் போராட்டம் ஹிந்து முன்னணி வலியுறுத்தல் வக்கீல்கள் போராட்டம் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
வக்கீல்கள் போராட்டம் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
வக்கீல்கள் போராட்டம் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
வக்கீல்கள் போராட்டம் ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2024 02:00 AM
திருப்பூர்;ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
நாடு முழுதும் முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு கடந்த, 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சூழலில், இப்புதிய மூன்று சட்டங்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல், வக்கீல்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த புதிய சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் மட்டுமே இதுபோன்ற தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களை காப்பாற்றும் வல்லமை, நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது.தமிழகத்தில் உள்ள வக்கீல்கள், ஒரு சில அரசியல் கட்சிகளின் சுயநலத்துக்கு பலியாகாமல், நாடு முழுதும் ஏற்கப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை ஏற்று, அதற்கு ஏற்ப தயாராகி பணிக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.